உடன்குடி : தூத்துக்குடி உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. இக்கோயில் கொடை விழா வில்லிசை, மாக்காப்பு தீபாராதனை,கும்பம் வீதியுலா வருதல்,செங்கிடாகார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அம்பாள் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன. உற்சவ அம்பாள் கற்பக பொன்சப்பரத்தில் திருவீதியுலா வந்தார். இதில் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.