வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படிகள் நடந்தன. அம்மன் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அக்னிச்சட்டி, பால்குடம், மாவிளக்கு நேர்த்தி கடன் செலுத்தப்பட்டன.இன்று பால்காவடி,மின் அலங்கார சப்பரத்தில் அம்மன் உலா நடக்கிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது. மே25ல் அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை செல்கிறார். ஏற்பாடுகளை தக்கார் கணேசன், செயல் அலுவலர் சுமதி, பூஜாரி நாகாராஜன் செய்து உள்ளனர்.