பதிவு செய்த நாள்
26
மே
2014
11:05
கரூர் : கரூரில் நடந்த, திருமுறை இசைத்தமிழ் நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்றனர். திருமுறை இசைத்தமிழ் வழிப்பாட்டு குழு சார்பில், 12வது இசைத்தமிழ் நிகழ்ச்சி, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில், இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த, முதல் நாள் நிகழ்ச்சி யில், சிங்கப்பூர், நிரஞ்சன் நந்தகோபன், தருமபுரம், ஞானப்பிரகாசம் ஓதுவார், மதுரை, பொன் முத்துக்குமார ஓதுவார், கரூர், ஜெகந்நாத ஓதுவார் ஆகியோர்களுக்கு, பொற்பதக்கம் வழங்கப்பட்டது.நேற்று, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், புகழ்ச்சோழர் மண்டபத்தில், அருளாளர்கள் நால்வருக்கு, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று, 63 நாயன்மார்களுக்கு வழிபாடு செய்து, திருமுறை இசை நிகழ்ச்சி நடத்தினர்.