பதிவு செய்த நாள்
28
மே
2014
02:05
துறையூர்: துறையூர் அருகே, பொன்னுசங்கம்பட்டியில் மகாகணபதி, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், ஜூன், 8ம் தேதி நடத்த பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். விழாவையொட்டி வரும், 25ம் தேதி கணபதி பூஜை செய்து முகூர்த்த கால் நட்டு, கங்கணம் கட்டுதல் நடைபெறும். ஜூன், 6ம் தேதியாக சாலை பிரவேசம், 7ம் தேதி கோபுர கலசம் அமைத்தல், கண்திறப்பு நடைபெறும். 8ம் தேதி கடகம் புறப்பாடு, கும்பாபிஷேகம், அபிஷேகம், பொது பூஜை, தசதானம், தசதரிசனம், கோ பூஜை நடைபெறும். பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, அம்மன் அருள் பெற கிராம மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.