ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி கிராமத்தில் பா.ஜ., சார்பில், விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றார். அதையொட்டி ரிஷிவந்தியம் ஒன்றியம் சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில், பா.ஜ., சார்பில் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தினர். மாவட்ட பொறுப்பாளர்கள் கருணாரெட்டி, தண்டபாணி மற்றும் சுந்தர்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, முருகன், தெய்வீகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.