காசிக்கு வருபவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டியது அபூர்வமான வராஹி கோயிலாகும். ஆனால், விடிவதற்குள் தரிசனத்தை முடித்து கொள்ள வேண்டும். நள்ளிரவில் அபிஷேகு ஆராதனை தொடங்கி விடியற்காலை 3 மணியுடன் முடிந்து விடுகிறது. காலை 5.30 மணிக்குள் தரிசனத்தை முடித்து கொள்ள வேண்டும். அதற்குள் மூன்று ஆரத்திகளையும் எடுத்து விடுகிறார்கள். தரிசனத்திலும் ஒரு தனித்தன்மை உண்டு. அம்பாளை நேரடியாக தரிசிக்க முடியாது. சன்னதியை வலம் வர முடியாது. அம்பாள் வீற்றிருக்கும் இடத்திற்கு மேல் உள்ள தளத்திலுள்ள ஒரு துவாரத்தை திறந்து ஒரு பாதாள அறையை காட்டுகிறார்கள். அங்கு தான் அம்பாளின் தரிசனம் கிடைக்கிறது. இவ்விடத்தில் இருந்து பாதங்களை மட்டுமே தரிசிக்கலாம். சற்று தொலைவில் உள்ள மற்றொரு துவாரத்தின் வழியாக வாராஹியின் உக்கிர கோலத்தை நிற்கும் நிலையில் தரிசிக்கலாம்.