செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இன்று திருத்தேர் உற்சவம் நடக்கிறது. செஞ்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் குடைவரை கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கருட கொடியேற்றத்துடன்துவங்கியது. இரண்டாம் நாள் நாளை சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும், நான்காம் நாள் சேஷவாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான பெரிய திருவடி எனும் கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று யானை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடந்தது. இன்று (31ம் தேதி) காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.