பதிவு செய்த நாள்
31
மே
2014
11:05
திருப்பதி: திருமலையில், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், பாதயாத்திரை தரிசனத்தை (திவ்ய தரிசனம்) ரத்து செய்ய, தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டது. எனினும், நேற்று, பாதயாத்திரை தரிசனம் வழக்கம்போல் அனுமதிக்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்தது. திருமலையில், நேற்று, அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில், அறங்காவலர் குழுத் தலைவர் பாபி ராஜு கூறியதாவது: கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க, திருப்பதியில் இருந்து, தினமும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு, 86 லட்சம் ரூபாய் செலவில், குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரை தரிசனம் வழக்கம் போல் தொடரும். லட்டு தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடுதலாக, ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2013 - -14ல், தலைமுடி காணிக்கை விற்பனை மூலம், 239.68 கோடி ரூபாய், வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தலை முடி வருமானம் 239 கோடி: ஐதராபாத்:2013-14ம் நிதியாண்டில் தலை முடியை ஏலத்தில் விடுத்ததன் மூலம் சுமார் 239 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 205 போனதாகவும். தற்போது 34 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என கோவில் அதிகாரி கே.பாபிராஜூ தெரிவித்துள்ளார். மேலும் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அனைத்து கம்பார்ட் மென்டுகளிலும் 108 இன்ஞ் அளவுள்ள டி.விக்கள் அமைக்க நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.