முருக்கேரி: திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூரில் சித்தர் ஏழுமலை சுவாமி கோவிலில் பிரதிஷ்டை விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு கணபதி பூஜை, ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கங்கை திரட்டல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10.00 மணிக்கு சித்தர் ஏழுமலை சுவாமிக்கு, வலம்புரி சங்கு அபிஷேகம், நவரத்தினம், யந்திர ஸ்தா பனம், மருந்து சாற்றுதல் நாகராஜ் குருக்கள் தலைமையில் நடந்தது. கலசத்தில் புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். 10.30 மணிக்கு தீபாராதனை மந்திரபுஷ்பம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.