பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
சேலம்: கோட்டை, அழகிரிநாத ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சேலம், கோட்டை, அழகிரிநாத ஸ்வாமி கோவில், மிகவும் பிரசித்திப்பெற்றது. இக்கோவிலை, கோட்டை பெருமாள் கோவில் என்றும் அழைப்பர். இக்கோவில் தேர்த் திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 9 மணிக்கு, துவஜாரோஹணம் (கொடியேற்றம்) நடக்கிறது. இதையொட்டி, அழகிரிநாத ஸ்வாமி, ஹம்ச (அன்ன) வாகனத்தில், மாலை, 6 மணிக்கு எழுந்தருளி, திருவீதி உலா வருகிறார். தொடர்ந்து, 5ம் தேதி, சிம்ம வாகனம், 6ம் தேதி ஹனுமந்த வாகனம், 7ம் தேதி சேஷ வாகனம், 8ம் தேதி வெள்ளி கருட வாகனம், 9ம் தேதி யானை வாகனம், 10ம் தேதி சூரணோத்ஸவம், புஷ்பக வாகனம், 11ம் தேதி குதிரை வாகனத்தில், ஸ்வாமி வீதியுலா வருகிறார். தவிர, நாள்தோறும் காலை, 8 மணிக்கு, வெள்ளி பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஜூன், 12ம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், 15ம் தேதி சத்தாபரணம், வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி முருகன், செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.