ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வல்லமடை உலகரட்சகர் தேவாலய விண்ணேற்பு விழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு, தேர்பவனி நடந்தது.