பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
01:06
திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாம சுந்தரி கோயிலில், வைகாசி விசாகப் திருவிழா,கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி காலை 5.45 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றப்பட்டு,வைகாசி விசாக விழா துவங்கியது. இரவில் சுவாமி, அம்மனும் திருவீதி உலா நடக்கிறது. நேற்று வெள்ளிக்கேடகத்தில், திருவீதி உலா நடந்தது. 4ல் காலை 9 மணிக்கு, திருத்தளிநாதருக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பில், மந்திர நீர் முழுக்காட்டு தீபாராதனை, 5ல் காலை 9.30 மணிக்கு,அம்மன் தவத்திற்கு எழுந்தருளி, திருக்கல்யாணம்,8ல், காலை 7 மணிக்கு நடராசர் பெருமான் திருவீதி உலா,9ல் மாலை 3 மணிக்கு தேரோட்டம், 10ல் காலை 10.30 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதலும்,இரவில் தெப்பமும் நடைபெறும்.