தஞ்சாவூர்: தஞ்சாவூர், மேலவீதி விஜயராமர் கோவில், அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 23ம் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவையொட்டி, தினமும், நான்கு ராஜவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில், ஸ்வாமி புறப்பாடு நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவம், விஜயராமர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.