பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
02:06
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையை வி.எச்.பி., அகில உலக ஆலோசகர் வேதாந்தம் துவக்கி வைத்தார். செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று முன் தினம் மாலை 6.30 மணிக்கு 108 விளக்கு பூஜை நடந்தது. அன்று காலை கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். 10 மணிக்கு சிறப்பு பஜனையும், பகல் 1 மணிக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. மாலை 4 மணிக்கு மேள கச்சேரி நடந்தது. 6.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. வி.எச்.பி., அகில உலக ஆலோசகர் வேதாந்தம் திருவிளக்கு பூஜையின் பிரதான குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைத்தார். கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி துரை ரங்கராமானுஜம் வரவேற்றார். கணே சன் முன்னிலை வகித்தார். வி.எச்.பி., மாநில அமைப்பு செயலாளர் ராஜா விளக்க உரை நிகழ்த்தினார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான், முன்னாள் துணை தலைவர் ஏழுமலை, வழக்கறிஞர்கள் பூபதி, ஆத்மலிங்கம், வைகை தமிழ், கணேஷ், என்.ஆர்.பேட்டை முன்னாள் தலைவர் ஏழுமலை, வி.எச்.பி., மாவட்ட தலைவர் கண்ணன், துணை செய லாளர் தேவராஜ், பொருளா ளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அருணகிரி மற்றும் ஆழ்வார், ஆண்டாள் சபையில், பஜனை கோஷ்டியினர் பங்கேற்றனர்.