நத்தம்: நத்தம் பகவதியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் நடந்தது. கணபதிஹோமம், நத்தம் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் இருந்து கன்னி மார்தீர்த்தம் அழைத்து வந்து அம்மனுக்கு 108 சங்கபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அன்னதானமும், 108 திருவிளக்கு பூஜை யும் நடந்தது. குளத்திலிருந்து பக்தர்கள் அக்னி சட்டி, பால் குடம் எடுத்து வந்தனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து நகர்வலம் வந்தனர். சொற்பொழிவு மற்றும் நாதஸ்வர கச்சேரி நடந்தது.அம்மன் மின் தங்கரதத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். வான வேடிக்கை நடந்தது. விழா நிறைவு நாளில் மஞ்சள்நீராடி அரண்மனை பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.