பழையநெல்லூர் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 02:06
சிதம்பரம்: பழையநெல்லூர் மகா சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (4ம் தேதி) நடக்கிறது. சிதம்பரம் அடுத்த பழையநெல்லூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் மகா சக்தி மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலை 7 மணிக்கு அம்பாள் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரம் காப்புக்கட்டுதல் நடந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து காப்புக்கட்டிக்கொண்டனர். இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை ஹோமங்கள் துவங்கியது. நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைப்பெற்று மாலை 7 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாகிதி, மகா தீபாராதனைகள் நடக்கிறது. நாளை (4ம் தேதி) காலை 6 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகிதி, தீபாராதனைகள் நடைப்பெற்று, கடம்புறப்பாடு செய்து மகா சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு நடக்கிறது. இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பழையநெல்லூர் கிராமவாசிகள் செய்கின்றனர்.