பதிவு செய்த நாள்
04
ஜூன்
2014
12:06
கெங்கவல்லி: கெங்கவல்லி, மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த, அரசு-வேம்பு திருக்கல்யாணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கெங்கவல்லி, மாரியம்மன் கோவில் வளாகத்திலுள்ள, அரசு-வேம்பு தெய்வீக திருக்கல்யாணம் மற்றும் எழுதீகங்கள் இணைச்சீர் விழா நடந்தது. ஆகாசராஜன் மகன் அரசுக்கும், பூமாதேவி மகள் வேம்புக்கும் தெய்வீக திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. இதையொட்டி. அதிகாலை, 4.30 மணிக்கு, எழுதீகம் செய்தல் விழா நடந்தது. பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக தினத்தில், காலை, 4.30 மணிக்கு மேல், 6 மணி வரை, ரிஷப லக்கினத்தில், அரசு -வேம்பு திருமணம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.