மயிலம்: தென்பசியார் பொறையாத்தம்மன் கோவிலில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து படைத்தனர். தென்பசியார் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இரவு 9 மணிக்கு மலர்களினால் அலங்கரித்த உற்சவர் வீதியுலா காட்சி நடந்தது.