கோவில்களில் மழைநீர் சேகரிப்பு: மாசாணியம்மன் கோவில் தயார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2014 12:06
ஆனைமலை : நிலத்தடி நீர்மட்ட உயரத்தை அதிகரிக்க, தமிழக அரசு எடுத்துவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவிலில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்மேற்கு பருவ மழைநீர் ஆற்றில் கலந்து வீணாக்கப்படாமல் சேகரிக்கப்படும். இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின், சுமார் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கிடைக்கும் மழைநீர், நிலத்தடி நீர் மட்டம் உயர உதவிகரமாக இருக்கும்.