முருக்கேரி: சிறுவாடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி கடந்த 2ம் தேதி பந்தக்கால் நடுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி மாலை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம், ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முருக்கேரி ஸ்ரீலஸ்ரீசீனுவாச சுவாமிகள் தலைமையில் யாக பூஜைகள் துவங்குகின்றன. வரும் 8ம் தேதி காலை 8:30 மணிக்கு யாத்ராதானம், தீர்த்த கடம் புறப்பாடும், 8: 45 மணிக்கு காளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், 9:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.