பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
11:06
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில், தேரோட்டம் நேற்று நடந்தது. காரைக்கால், திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு, பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இம்மாதம், 3ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன், வசந்த மண்டபத்திலிருந்து, யதாஸ்தானத்திற்கு எழுந்தருளினார். 6ம் தேதி, தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. தேரோட்டம், நேற்று நடந்தது. தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கோஷங்கள் முழங்கியபடி, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.