பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
01:06
திருப்பரங்குன்றம்: மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள விளாச்சேரியில் 700 ஆண்டு பழமையான சீதா, லக்ஷ்மண சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் ராமபிரான், திருக்கல்யாண கோலத்தில் வலது புறம் சீதா தேவி அமர்ந்தும், இடதுபுறத்தில் லக்ஷ்மணர் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கூட சீதா தேவி ராமருக்கு இடது புறத்தில் அமர்ந்துள்ளார்.
கடைசியாக 1903ல் கும்பாபிஷேகம் நடந்துள்ள இக்கோயிலுக்கு, சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்கள் தலைமையில் வருகிற 9.7.2014 அன்று கும்பாபிஷேகம் நடத்த பக்தர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தளம், சுற்றுச்சுவர், யாகசாலை, வேத விற்பன்னர்கள் சம்பாவணை, வர்ணம் பூசுதல், அன்னதானம், கும்பாபிஷேகம் என பல திருப்பணிகள் நடைபெற பெருந்தொகை தேவைப்படுகிறது. ஒரு கோயிலின் கும்பாபிஷேகத்தை தரிசித்தாலே பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் இது போன்ற மிகப்பழமையும் பெருமையும் மிக்க கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு பொருளதவி செய்தால் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் ஏழேழு ஜென்மத்திற்குரிய புண்ணிய பலன்களை பகவான் வாரி வழங்குவார் என புராணங்கள் கூறுகின்றன.
பக்த கோடிகள் அனைவரும் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணியில் தங்களை இணைத்து கொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீராமபிரானின் திருவருளுக்குப் பாத்தியம் ஆகும்படி திருப்பணிக்குழு வேண்டிக்கொள்கிறது. நன்கொடை வழங்கும் பக்தர்களின் பெயர், நட்சத்திரத்தை கும்பாபிஷேகத்தின் போது அர்ச்சனை செய்து, பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
நன்கொடை அனுப்ப தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
டி. கண்ணன், செயலாளர்,
என். சங்கர நாராயணன், பொருளாளர்,
ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருப்பணிக்குழு,
விளாச்சேரி,
மதுரை-625006
மொபைல்: 97888 54854