லாலாப்பேட்டை: திருக்காம்புலியூர், செக்கணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், பிரசித்தி பெற்ற செக்கணம் அங்காளபரமேஸ் வரி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 7ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து, யாககால பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 7.30 மணிக்கு யாத்ரா தானத் துடன் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.