கோவை : புலியகுளம் புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் கொடியேற்றி துவக்கி வைத்தார். அந்தோணியார் சர்ச் பாதிரியார் ஜார்ஜ் தனசேகர் கூறுகையில், புனித அந்தோணியார் தேவாலயத்தின் தேர் திருவிழா, வரும் 15ம் தேதி கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு வரும் 14ம் தேதி வரை நவநாள் மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும். 15ம் தேதி மாலை 7.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர், என்றார்.