திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2014 12:06
திருவெண்ணெய்நல்லூர்: அம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் திருவிழாவில் பக்தர்கள் உடலில் வேல்கம்பிகளை குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவெண்ணெய்நல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி வீதியுலாவும், கடந்த 5ம்தேதி இரவு கரக ஊர்வலம், 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. பக்தர்கள் உடலில் வேல் கம்பிகளை குத்திக்கொண்டு அரிகண்ட காவடி எடுத்தனர். கணேசன் என்பவர் 11 அடி உயர கம்பியை வாயில் குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத் தினார். தொடர்ந்து 7ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.