தியாகதுருகம்: தியாகதுருகம், புக்குளம் எல்லையில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மண்டல பூஜை துவங்கியது. தியாகதுருகம் மற்றும் புக்குளம் ஊர் எல்லையில் உள்ள நூற்றாண்டு பழமையான திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. சன்னதி அருகில் உள்ள பாறைமீது 23 அடி உயர ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் இயற்கையாக உருவான சங்கு தீர்த்தம் உள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், மகாமாரியம்மன், முத்தால் ராவுத்தர், ஆஞ்சநேயர், பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பணிக்குழு தலைவர் புகழ்வாணன், பிச்சாண்டி பிள்ளை, பூசாரி கண்ணன் ஆகியோர் பூஜைகளை முன்னிருந்து நடத்தி வருகின்றனர்.