காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் புகழ் பெற்ற அனந்தீஸ்வரன் கோவில் உள்ளது. ஒவ்வொறு ஆண்டும் இக்கோவிலில் வைகாசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று மக்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய விழாவான நேற்று தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. தேர் திருவிழானை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சாமி அலங்காரத்துடன் தேரில் வந்து அமர்ந்தார்.அதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். பின்னர் காட்மன்னார்கோவிலின் நான்கு வீதிகளின் வழியாக சென்று வந்த தேர் நேற்று மதியம் மீண்டும் கோவில் வளாகம் வந்தடைந்தது. மாலை 6 மணிக்கு மேல் சாமி கோவிலுக்குள் சென்றது. பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.