சுப்ரமணிய சுவாமி கோவிலில் விசாக திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2014 12:06
அச்சிறுபாக்கம் : இராமாபுரத்தில் உள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் அச்சிறுபாக்கம் அடுத்துள்ள இராமாபுரம் கிராமத்தில், சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாள், வரசக்தி விநாயகர் ஆகிய கடவுள் சன்னிதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு 38ம் ஆண்டு விசாக பெருவிழா, நேற்று கோலாகலத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, மாலை 4:30 மணிக்கு மங்கள இசையுடன் சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மூலவருக்கு சந்தனக் காப்பும் நடைபெற்றது. இன்று (11ம் தேதி) காலை 6 மணிக்கு சேவற்கொடி உயர்த்துதலும், பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். வீதிஉலா இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுடன் பால்காவடி, வேல்காவடி, புஷ்பக்காவடி செல்லுத லும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.