பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
01:06
பழநி: பழநி கோயில் உண்டியலில், 21 நாட்களில், ரூ.1.57 கோடியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. தங்கம் 850 கிராம், வெள்ளி 9 ஆயிரத்து 50 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 1183 மற்றும் ரொக்கம் ரூ.1.57 கோடி இருந்தது.தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட வேல், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம், ஆள்ரூபம், காவடி, படகு, பாதம், கொலுசு, வீடு போன்ற பொருட்களும் இருந்தன. எண்ணிக்கையின்போது, இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர்கள் மேனகா, ரமேஷ் உடனிருந்தனர்.