பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
03:06
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கற்பக விநாயகர் கோவிலில், இன்று 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, புண்யாகவாகனம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 7:30 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, 9:30 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 9:45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், 10:15 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.