திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சுவாதி வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூரில் சிவஞானத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டாரின் ஜீவசமாதி உள்ளது. இக்கோவிலில் மாதாந்திர சுவாதி வழிபாடு நேற்று நடந்தது. ஆத்தூர் சைவ சித்தாந்த பயிற்சி மையம் சார்பில் காலை 9:00 மணிக்கு திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி, காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:30 மணிக்கு சைவ சித்தாந்தம் குறித்து அம்பலவாணத்தம்பிரான் சுவாமிகள் சொற் பொழிவு நிகழ்த்தினார். மதியம் 12:30 மணிக்கு மகேசுவரபூஜை நடந்தது. ஏற்பாடுகளை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜோதிசண்முகம், காங்கமுத்து, பாஸ்கர், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.