கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாட வீதிகளில் உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், உபயதாரர் தணிகாசலம் செய்தனர்.