செஞ்சி : செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.காலை 5 மணிக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு விசேஷ ஹோமம், அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை குருசாமி திருமுருகன் செய்தார். தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.