முருக்கேரி : முருக்கேரி அருகே உள்ள அடசல் கிராம முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. கடந்த 3ம் தேதி கொடியேற்றி பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 9ம் தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் மூலவருக்கு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு பக்தர்கள் பூங்கரக வீதியுலா நிகழ்ச்சி நடத்தினர். பிற்பகல் ஒரு மணிக்கு சாகைவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.