பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
02:06
ஓசூர்: ஓசூரில் உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஓசூர் டேங் தெரு, சத்ய சாய்நகரில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில், 12ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி, கடந்த, 14ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, 14ம் தேதி மாலை, 6 மணிக்கு, தூப ஆரத்தி, மாலை, 6.30 மணிக்கு, கணபதி பூஜை, நவக்கிரஹ பூஜை, வாஸ்து சுதர்சன பூஜை, தன்வந்திரி பூஜை, சரஸ்வதி பூஜை, கலசஸ் ஸ்தாபனம், இரவு, 7 மணிக்கு, சாய்பாபா பாடல் பஜனை நிகழ்ச்சி மற்றும் இரவு, 9 மணிக்கு, ஆரத்தி ஆகியவை நடந்தது. தொடர்ந்து, நேற்று (15ம் தேதி) காலை, 6 மணிக்கு, காகட ஆரத்தி, 6.30 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லஷ்மி குபேர ஹோமம், சாயி பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 12ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இதையொட்டி, மதியம், 12.30 மற்றும் மாலை, 6 மணிக்கு, தூபாரா ஆரத்தி, இரவு, 7 மணிக்கு, அண்ணமாசார்யா திருமலா திருப்பதி தேவஸ்தான ஆலூர் ராஜமோகன் தலைமையில், சாய்பாபா பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.