அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மசூதியில் ஷபே-பராத் சிறப்பு தொழுகை மற்றும் சொற்பொழிவு நடந்தது. ஷபே-பராத் இரவை முன்னிட்டு அவலூர்பேட்டை மசூதியில் இஷா தொழுகை இரவு 9.30 மணிக்கு துவங்கியது. அசரத் முஸ்தகீம் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். நபிலான ரகாத் ஸலாத்துல் தஸ்பீஹ் மற்றும் நபிலான சிறப்பு தொழுகை நடத்தினர். உலக அமைதி மற்றும் அனைவருக்கும் பாவமன்னிப்பு கிடைத்திட துவா நடந்தது. அடக்கஸ்தலத்திற்கு முத்தவல்லி ஹாஜிபாஷா தலைமையில் ஜமாத்தினர் ஊர்வலமாக சென்றனர். யாசீன், தபாரக்கல்லதி சூராக்கள் ஓதினர். வீடுகளில் பெண்கள் நபிலான தொழுகையில் ஈடுபட்டனர்.