காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்துள்ளது மேல்வெண்பாக்கம் கிராமம். இங்கு லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதில் நேற்று முன்தினம், உத்திராடப் பெருவிழா, கோலாகலமாக நடந்தது. காலை 7:00 மணிக்கு யாகம், அதைத்தொடர்ந்து, 9:00 மணிக்கு, திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு, அன்னதானம் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு லட்சுமி நாராயணப்பெருமாள் திருகல்யாணம் சிறப்பாக நடந்தது. அதைதொடர்ந்து சிறுவர்கள் பங்கேற்ற, பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் வீதிவுலா நடந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் பொது மக்களும் செய்திருந்தனர்.