பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
12:06
மணப்பாக்கம்: மணப்பாக்கம் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட கரிய மாணிக்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில், மூன்று நாட்கள் யாகபூஜை நடைபெற்றது. கடைசி நாளான நேற்று, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டன. முன்னதாக, யாக குண்டங்கள் அமைத்து மந்திரங்கள் முழங்கப்பட்டன. பின்னர், நாதஸ்வர இன்னிசை, செண்டைமேளம் முழங்க, கரிய மாணிக்க பெருமாளை, கோவிலை சுற்றி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதன் பின், கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது, வானத்தில் கழுகுகள் வட்டமிட்டன. பெருமாளே கழுகு ரூபத்தில் வந்திருப்பதாக நினைத்து, கோவிந்தா, கோவிந்தா எனக் கூறி, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வணங்கினர். லட்சுமி நரசிம்மன், ஸ்ரீதேவி, பூதேவி, துப்பிக்கையாழ்வார், கருடாழ்வார் மற்றும் 27 அடி ஆஞ்சனேயர் சிலை ஆகியவை, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.