பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
12:06
ஊட்டி : ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலய விழா, விமரிசையாக நடந்தது. ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த, இருதய ஆண்டவர் தேவாலய விழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மாலை 5:30 மணிக்கு பல்வேறு குருக்கள் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் மறையுரை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம், தேவாலய குடும்பப் பெருவிழா கொண்டாடப்பட்டது. காலை 10:00 மணிக்கு மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலியும், தொடர்ந்து, பங்கில் உள்ள சிறுவர், சிறுமியர்க்கு புதுநன்மை, உறுதிபூசுதல் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.மாலை, புதிய பங்கு குருக்களின் தலைமையில் நடந்த திருப்பலியை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இருதய ஆண்டவர், பவனி வந்தார். இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இரவு 9:00 மணிக்கு, நற்கருணை ஆசிருடன் விழா நிறைவு பெற்றது.