பதிவு செய்த நாள்
21
ஜூன்
2014
12:06
ஈரோடு: ஈரோடு காரைவாய்க்கல், சுயம்பு ஸ்ரீநாகர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா, இன்று நடக்கிறது. ராகு பகவான், துலாம் ராசியில் இருந்து, இன்று காலை, 11.12 மணிக்கு கன்னி ராசிக்கும், கேது பகவான், மேஷ ராசியில் இருந்து, மீன ராசியிலும் பிரவேசிக்கிறார். இன்று காலை, 8.30 மணியில் இருந்து, 11.12 மணி வரை ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகள் நடக்கிறது. மேஷம், கன்னி, தனுசு, கும்பம், மீனம், கடகம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இன்று காலை, 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. பின்னர் ஆவாஹனம், ராகு, கேது சகஸ்ரநாம அர்ச்சனை, ஆராதனை, கணபதி, நவக்கிரக ஹோமம் துவங்குகிறது. காலை, 11.45 மணிக்கு மேல், கடம் தீர்த்தம் அபிஷேகம், தீபாராதனை, மூலவர் மற்றும் ப்ரஹார மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.