Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுக்காம்பட்டி பூசாரிப்பட்டி கோயில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்பிக்கலை ஐயன் கோவில் ராகு,கேது பெயர்ச்சி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
12:06

ஈரோடு: ஈரோடு மாவட்டம், தண்ணீர்பந்தல்பாளையம், தங்கமேடு, தம்பிக்கலை ஐயன் சுவாமி கோவில், ஸ்ரீராகு, ஸ்ரீகேது பரிகார ஸ்தலமாகும். இங்கு, ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று, (21ம் தேதி) சிறப்பு பரிகார பூஜைகள் நடக்கிறது. இன்று காலை, 11.18 மணிக்கு ராகுபகவான், துலாம் ராசியில் இருந்து, கன்னி ராசிக்கும், ஸ்ரீகேது பகவான், மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். ராகு பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம்,சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், கேது பெயர்ச்சியால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகார பூஜை செய்து கொள்ள வேண்டும். இதற்காக, தம்பிக்கலை ஐயன் கோவிலில், இன்று காலை 8.55 முதல், 12 மணி வரை சிறப்பு பூஜை, வேள்விகள் நடக்கிறது. விசேஷ யாகத்தில், சங்கல்ப பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள், யாகத்துக்கு தேவையான புஷ்பம், மந்தாரை, செவ்வல்லி, பால், தயிர், நெய், உளுந்து, கொள்ளு, இளநீர், யாக திரவியங்கள், நிதியுதவிகளை வழங்கலாம். மதியம், 12.15 மணி முதல், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, தேவிகருமாரிதாசர் சுவாமிகள், செயல் அலுவலர் சுகுமார், தக்கார் ராஜேந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar