பெரியப்பட்டு புனித அந்தோனியார் ஆலய ஆண்டுப் பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2014 02:06
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஆண்டுப் பெருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடம் ஆண்டுப் பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து 20ம் தேதி வரை தினமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு ஜெபம் மற்றும் நவநாள் தேர் பவனி நடந்தது. சிறப்பு விழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி மாலை 6.00 மணிக்கு சிறப்பு ஜெபம் மற்றும் திருப்பலி செய்யப்பட்டது. இரவு 10.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தைகள் ராஜரத்தினம், ஜெகராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.