தொண்டி அருகே நம்புதாளையில் சிவசக்தி சுவாமிக்கும், அண்ணபூரணி தாயாருக்கும் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவு நாளையொட்டி, நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் ரெத்தினம் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.