பதிவு செய்த நாள்
24
ஜூன்
2014
11:06
குறிச்சி : குறிச்சி ஹவுசிங் யூனிட் அருகேயுள்ள துாய தமத்திரித்துவ ஆலய முதலாமாண்டு நிறைவு முன்னிட்டு, சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடந்தது.
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட்டை அடுத்து, ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள துாய தமத்திரித்துவ ஆலயம், கோவை கத்தோலிக்க மறை மாவட்டத்தின், ௬௭வது பங்காக, கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. இதன் முதலாமாண்டு நிறைவு விழா, கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை ௭.௩௦ மணிக்கு, சிறப்பு திருப்பலி ஆராதனையை கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையேற்று நடத்தினார். அதுபோல, மாலை ௬.௦௦ மணிக்கு, திருப்பலி மற்றும் தேர் பவனி, நெல்சன் தலைமையில் நடந்தது. திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர். பங்குத்தந்தை இக்னேஷியஸ் திரவியம், ஏற்பாடுகளை செய்திருந்தார்.