பதிவு செய்த நாள்
26
ஜூன்
2014
12:06
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டது. இதில், 46 லட்சம் ரொக்கம் மற்றும், 180 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்ஸிகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். தரிசனதுக்கு வரும் பக்தர்கள், காணிக்கை செலுத்த, கோவிலில், 46 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. மாதந்தோறும் இறுதி வாரத்தில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படும். நேற்று காலை, ஸ்ரீரங்கம் கோவில் துணை கமிஷனர் ஜெயராமன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாலையில் கணக்கிடப்பட்டதில், 46 லட்சம் ரொக்கப்பணம், 180 கிராம் தங்கம், 700 கிராம் வெள் ளி, பட்டு வேட்டி, சேலைகள் இருந்தன. ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றிப்பார்க்க, சமீப காலமாக வெளிநாட்டவர் வருகை அதிகரித்துள்ளது. உண்டியலில், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கன் மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளின், 300 வெளிநாட்டு கரன்ஸிகள் கணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.