பதிவு செய்த நாள்
27
ஜூன்
2014
11:06
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியலில், பக்தர்கள் 38 லட்சத்து 45 ஆயிரத்து 475 ரூபாய் காணிக்கையாக செலுத்தி இ ருந்தனர். ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில், கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். வெளிமாவட்டங்கள் மற்றும் கோவையின் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இங்கு வருகின்றனர். அவர்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் காணிக்கையாக பணம், வெள்ளி, தங்கம் போன்ற பொருட்களை உண்டியலில் செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, 16 நிரந்தர உண்டியல்களும், 6 தட்டு காணிக்கை உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. மொத்தம் 16 நிரந்தர உண்டிய ல்கள் மற்றும் ஆறு தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், நிரந்தர உண்டியலில், 29 லட்சத்து 15 ஆயிரத்து 66 ரூபாயும், தங்கம் 209 கிராமும், வெள்ளி 354 கிராமும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டு இருந்தது. தட்டு காணிக்கை உண்டியலில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 309 ரூபாய் காணிக்கையாக இருந்தது. அன்னதான உண்டியலில் 78 ஆயிரத்து 100 காணிக்கையாக வந்தது. மொத்தம் 38 லட்சத்து 45 ஆயிரத்து 475 ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் திறப்பு நிகழ்ச்சி, மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் அனிதா முன்னிலையில் நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர்.