மயிலம்: தென் பசியார் கிராம முருகன் கோவிலில் இன்று 30ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தென்பசியார் கிராமத்திலுள்ள விநாயகர், பால முருகன், ஐயப்பன் கோவில்களில் திருப்பணிகள் முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று (29ம் தேதி) மாலை 3.30 மணிக்கு வினாயகர் வழிபாடும், மாலை 4 மணிக்கு முதற்கால வேள்ளி வழிபாடும், இரவு 9 மணிக்கு நாடிசந்தனம் நடந்தது. இன்று (30ம் தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடும், 9.45 மணிக்கு வேள்ளி சாலையிலிருந்து திருக்குடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். மாலை 6 மணிக்கு வள்ளி, தேவசேனா, பாலசுப்பரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு மலர் களினால் அலங்கரித்த உற்சவர் வீதியுலா காட்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.