திருநள்ளார் நளநாராயணப்பெருமாள் கோவிலில் புதிய வாகனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2014 12:07
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் நளநாராயணப்பெருமாள் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஷேசவாகனம் மற்றும் சூரியபிறை வாகனத்தை கோவிலுக்கு வழங்கினர். திருநள்ளார் நளம்குளம் அருகில் உள்ள நளநாராயணப்பெருமாள் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சாமி வீதியுலா செல்வதற்கு வாகனம் இல்லை. இதனால் காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வாகனத்தை கொண்டுவரப்பட்டு சாமி வீதியுலா நடைபெறும். இந்நிலையில் கோவில் நிர்வாகம் புதிதாக ஷேசவாகனம் மற்றும் சூரியப்பிறையை ரூ.1.50 லட்சம் வாகனம் செய்யப்பட்டது. இவ்வாகனத்தை கோவிலுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,சிவா,கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டன்.மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு வாகனத்தை நளநாராயணப்பெருமாள் கோவிலில் ஒப்படைந்தனர்.