பதிவு செய்த நாள்
02
ஜூலை
2014
11:07
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னபூரணி தினம் கொண்டாடினர். இதை முன்னிட்டு வெ ங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். வழக்கறிஞர்கள் ஸ்ரீபதி, ஆத்மலிங்கம், வைகை தமிழ்ச்செல்வன், டாக்டர் பாலகோபால், உபயதாரர் குறிஞ்சிவளவன், நுகர் பொருள் விநியே õகஸ்தர்கள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ரோட்டரி சங்க புதிய தலைவர் மைக்கேல், செயலாளர் இளங்கோவன், நிர்வாகிகள் ராஜேந்திரன், ஏழுமலை, துளசிராமன், சந்திரசேகரன், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ் சர்மா சிறப்பு அலங்காரம் செய்தார், வேங்கடகிரி ÷ காவிந்தநாமசபா குழுவினர் பூஜைகளை செய்தனர்.