திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, நேற்று நடந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிவகாமி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷமிட்டு தரிசனம் செய்தனர். திருமஞ்சன கோபுர வாசலில், பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமிகள், மாட வீதிகளில் பவனி வந்தனர்.